முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக
கேரளத்தில் வசிக்கும் தமிழ் மலர் என்கிற
பெயரில் ஒரு தமிழர் -
மலையாளிகளை ஆதரித்து
எழுதி வருகிறார்.
http://www.vimarisanam.wordpress.com
என்கிற வலைத்தளத்தில் முல்லைப் பெரியாறு
பற்றி விவரமான ஒரு கட்டுரை வந்திருக்கிறது.
இந்த தளத்திற்கு அவர் எழுப்பிய வினாக்களுக்கு
காவிரிமைந்தன் விவரமான விளக்கம் ஒன்றை
கொடுத்துள்ளார்.
அந்த விளக்கம் இயன்ற வரை அதிகம் பேரைச்
சென்று சேர வேண்டும். எனவே அதை நான்
இங்கே மீண்டும் மறுபிரசுரம் செய்கிறேன்.
————————————-
வருக நண்பரே
என் விளக்கத்திற்கு முன்னர் உங்களுக்கு
ஒரு கேள்வி -
நீங்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கிறீர்களா ?
அல்லது கேரளாவில் வேறு எங்காவது ?
நீங்கள் கூறும் இந்த “மரண பயம்” உங்களுக்கு
ஏற்படுகிறதா ? அல்லது வேறு யாராவது கூறுவதை
வைத்து கூறுகிறீர்களா ?
———
அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ
வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின்
பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே
சொல்கிறோம்.(அப்படியானால் நீங்களும்
அவர்களில் ஒருவரா ? ) இதில் என்ன தவறு கண்டீர்கள்?
—————-
இதை யார் சார்பாக நீங்கள் சொல்கிறீர்கள் ?
நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு
கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி இருக்கிறாரே -
அணையை உடைப்பது என்றும், அதுவரை நீர்மட்டத்தை
120 அடியில் நிறுத்தி வைப்பது என்றும்
தீர்மானித்திருக்கிறோம் என்று !
ஒன்று நீங்கள் எங்கோ தவறாகப்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இல்லையென்றால் நீங்கள்
இத்தகைய கேள்வியைக் கேட்கவே மாட்டீர்கள்.
என் இடுகையிலேயே உங்கள் கேள்விக்கான
விரிவான பதில் இருக்கிறது.
இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன் -
சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர் குழு -
சகலவிதமான சோதனைகளையும் செய்து
பார்த்த பிறகு தான்,
அணையை மீண்டும் தேவையான விதங்களில்
பலப்படுத்திய பிறகு தான்,
அணைக்கு நிச்சயம் எந்தவித
ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட
பிறகு தான் 27/02/2006 அன்று நீர்மட்டத்தை
உயர்த்த அனுமதி கொடுத்தது.
சுப்ரீம் கோர்ட் – பொறுப்பில்லாமல் தீர்ப்பு கொடுக்கும்
என்று நினைக்கிறீர்களா ? அல்லது கேரள
அரசியல்வாதிகள் சுப்ரீம் கோர்ட்டை விட
பொறுப்பானவர்களா ?
சரி -அணை உடைந்தால் கூட, வெறும்
450 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும்.
அவர்களை உடனடியாக
இடம் மாற்றி விடலாம் என்றும்,
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளிவரும்
நீரை, அதைவிட 7 மடங்கு பெரிய இடுக்கி அணையில்
தேக்கி விடலாம் என்றும்,
- போன வாரம் கேரளா உயர்நீதிமன்றத்தில்
கேரள அரசின் அட்வகேட் ஜெனரல்
கொடுத்த தகவலை நீங்கள் படிக்கவில்லையா ?
புதிய அணை கட்ட குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் ஆகும்
(அதுவும் கேரள அரசு முனைந்து பாடுபட்டால் ).
அதுவரை தென் தமிழ் நாட்டின் 2 லட்சம் விவசாயிகள்
பட்டினி கிடக்கட்டுமா ?
6 லட்சம் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல்
காத்திருக்கட்டுமா ?
700 கோடி ரூபாயை முழுக்க முழுக்க தமிழ் நாடு
பயன்பெறப்போகும் ஒரு அணைக்கு செலவு செய்வதாக
கேரள அரசியல்வாதிகள் கூறுவதை நீங்களும்
நம்புகிறீர்களா ?
எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய அணை கட்டப்படும்
இடம் தாழ்வானது என்றும் அங்கிருந்து தமிழ் நாட்டிற்கு
நீரை திசை திருப்ப முடியாது என்றும் தரப்பட்டுள்ள
தகவல்களை நீங்கள் படிக்கவில்லையா ?
என் இடுகையை மீண்டும் ஒரு முறை
படித்துப் பாருங்கள்.
பெரியாறு அணைக்கு நில அதிர்வால் ஆபத்து என்று
சொல்பவர்கள் -
அதிலிருந்து 45 கிலோமீட்டர் அருகிலேயே இருக்கும்
இடுக்கி அணைக்கு எந்தவித ஆபத்தும் நேராது
என்று எதை வைத்து கூறுகிறார்கள்.
ஏன் நில அதிர்வு இடுக்கி அணையைத் தொட
மாட்டேன் என்று கேரள அரசியல்வாதிகளுக்கு
சத்தியம் செய்து கொடுத்திருக்கிறதோ ?
இவர்கள் கூறும் இதே நில அதிர்வு,
இடுக்கி அணையை உடைத்தால் இவர்கள் என்ன
செய்வதாக இருக்கிறார்கள் ?
கேரள மக்களின் பயத்தைப் போக்க
அதையும் இப்போதே உடைத்து விட வேண்டியது தானே ?
அதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய
அவசியம் இல்லையே !
கேரள அரசியல்வாதிகள் செய்வது
பச்சை அயோக்கியத்தனம். வேண்டுமென்றே
கேரள மக்களிடம் பீதியைக் கிளப்புகிறார்கள்.
ஏன் – விஷயம் ஏற்கெனவெ சுப்ரீம் கோர்ட்டின்
விசேஷ குழுவின் பரிசீலனையில் தானே
இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில்
சுப்ரீம் கோர்ட் மீண்டும் சகல விஷயங்களையும்
ஆராய்ந்து,இறுதித் தீர்ப்பு கொடுக்கத்தானே போகிறது ?
அதற்குள்ளாக ஏன் இந்த கூக்குரல் ?
நண்பரே – ஒன்றை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
சென்னையிலும், கோவையிலும் எவ்வளவு
கேரளத்தவருக்கு தமிழ் நாடு வாழ்வு கொடுத்துக்
கொண்டிருக்கிறது தெரியுமா ?
அவர்களில் யாரையாவது கேட்டுப்பாருங்கள் -
அவர்கள் இங்கு எவ்வளவு கௌரவமாகவும்,
வசதியாகவும் வாழ்கிறார்கள் என்பது புரியும்.
சுயநலவாத கேரள அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் தான்
தொடர்ந்து தமிழர்களுக்கு
துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தானாக திருந்தா விட்டால்”இயற்கையே”
அவர்களைத் திருத்தும்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்