இருக்கும் இடம் தெரிந்தது ….
துடிக்கும் ராஜபக்சே சகோதரர்கள் !
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு மூலை.
வடக்கே 1200 கிலோமீட்டர் தூரத்திற்கு
நீண்ட நெடிய செங்கடல் கடற்கரை.
தெற்கே மிகப்பெரிய பாலவனம்,
அதைஒட்டிய எத்தியோப்பியா நாடு -
மற்ற இரு பக்கங்களிலும்
ஒங்கி வளர்ந்த பசுமலைக்காடுகள்
சூழ்ந்த ஒரு இடம் – சுமார் 50 லட்சம்
மக்கள் வாழும் நாடு -
அது தான் எரித்ரியா !
தன்னை விட 20 மடங்கு பெரிய
எத்தியோப்பியா நாட்டுடன் 31 ஆண்டுகள்
விடாமல் கெரில்லா போரைத் தொடர்ந்து
இறுதியில் அதன் பிடியிலிருந்து விடுபட்டு
சுதந்திரம் அடைந்த நாடு எரித்ரியா.
எத்தியோப்பிய பெரும்பான்மையினர்
தங்கள் மொழியையும், பண்பாட்டையும்
சிறுபான்மையினரான எரித்ரியர் மீது
திணிக்க தொடர்ந்து செய்த முயற்சியே
இந்த பிரிவினைக்கு அடிப்படைக் காரணம்.
(அடிப்படையில் ஏதோ ஒற்றுமை
கண்ணுக்குத் தெரியவில்லை ? )
நீண்ட நெடிய, கடுமையான போரை,
தொடர்ந்து நடத்தி
வெற்றி பெற்ற புரட்சி கவுன்சில்
அதிகாரத்தைக் கைப்பற்றி தன்னிடமே
தக்க வைத்துக்கொண்டுள்ளது.
நாட்டில் புரட்சி கவுன்சிலின்
சர்வாதிகாரமே
ஆட்சி புரிகிறது.
மக்கள் அனைவரும் குறைந்த பட்சம்
2 ஆண்டுக்காலம் கட்டாயமாக
ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும்.
40 வயதுகுட்பட்ட ஆண்கள் அனைவரும்
அரசுப் பணியில் !
தன்னை விட 20 மடங்கு பெரிய
எத்தியோப்பாவிடமிருந்து தொடர்ந்து தங்கள்
சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ள
இது அவசியம் என்கிறது சர்வ அதிகாரத்தையும்
கொண்ட புரட்சி கவுன்சில்.
மறைத்து வைக்கவும், மறைந்து வாழவும்
வசதியான, ஆள் அரவமே இல்லாத
120 குட்டிக் குட்டித் தீவுகள்.
எதற்காக இந்த வர்ணனை
எல்லாம் என்கிறீர்களா ?
கிட்டத்தட்ட தங்களைப்போன்ற
பின்னணியிலேயே
சிங்களப் பேரின ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடி வரும் தமிழீழப் போராளிகளுக்கு
பின்புலமாக இருந்து ஆதரவு கொடுத்து வந்த
நாடு தான் எரித்ரியா !
(வெளியுலகில் இதைப்பற்றி இப்போது
தான் தெரிய ஆரம்பித்திருக்கிறது )
இறுதியில் தப்பிய தமிழீழ விடுதலைப்
போராளிகளில் சிலர் இங்கே இருப்பதை
மோப்பம் பிடித்து விட்ட ராஜபக்சேயும்
அவனது அருமைச் சகோதரர்களும் -
தங்களால் ஆன மட்டும் முயற்சி செய்து
விட்டார்களாம் -தொலைந்தவர்களைப் பிடிக்க -
தங்கள் கால்களை உள்ளே நுழைக்க.
சிறிதும் மசியவில்லை புரட்சி கவுன்சில்.
யாரையும் உள்ளே விடுவதாக இல்லை.
சூர்யா நடித்த “அயன்” படம் பார்த்தீர்களா?
அதில் அவர் வைரம் கடத்தி வர ஆப்பிரிக்க
நாடு ஒன்றுக்கு போவார்.
மிகக்கடுமையான சூழல் ! அதிகாரத்தில்
இருப்பவர்களுக்குத் தெரியாமல்,
ஈ, எறும்பு கூட நுழைய முடியாது !
கிட்டத்தட்ட அதே பின்னணி தான்
இந்த நாட்டில். அவர்கள் ஆதரவு இல்லாமல்,
அவர்களுக்குத் தெரியாமல்,
வெளி ஆட்கள் யாரும் எரித்ரா நாட்டின்
உள்ளேயே நுழைய முடியாதாம்.
துடிக்கிறார்களாம் ராஜபக்சே சகோதரர்கள் !
இருக்கும் இடம் தெரிந்தும் …
ஒன்றும் செய்ய முடியாமல் …
தவிக்கிறார்களாம் !


