முடியைப் பிய்த்துக்கொள்கிறேன். அர்த்தம் புரியவில்லை – கதி கலங்குகிறது – யாராவது அர்த்தம் சொல்லி என்னைக் காப்பாற்றுவீர்களா ?

முடியைப் பிய்த்துக்கொள்கிறேன். அர்த்தம்
புரியவில்லை – கதி கலங்குகிறது -யாராவது
அர்த்தம் சொல்லி என்னைக் காப்பாற்றுவீர்களா ?

அண்மையில் வெளிவந்துள்ள நக்கீரன் இதழில்
கேட்கப்பட்டிருக்கும் – “கலைஞருக்குப் பிறகு “
என்கிற  ஒரு சாமர்த்தியமான
கிடுக்கிப்பிடி  கேள்விக்கு  முத்தமிழ் வித்தகர்
கலஞர்  அளித்துள்ள விடை கீழே காண்க -

அந்தக் காலத்தில் “கோனார் நோட்ஸ்”
என்ற பெயரில் தமிழ்ச் செய்யுள்களுக்கு – பதவுரை,
பொருளுரை, பொழிப்புரை  என்று விலாவாரியாக
விளக்கமளிக்கும் புத்தகங்கள் வருவது வழக்கம்.
தமிழ் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மிக மிக
உதவியாக இருந்தவை அந்த விளக்க புத்தகங்கள்.

இப்போதெல்லாம் கலைஞர் பேசுவதன் அர்த்தத்தை
கண்டு பிடிக்கவும் அத்தகைய உதவி தேவைப்படுகிறது.

“உங்களுக்குப் பிறகு ?”

என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும்
கதி கலங்க வைக்கும் பதிலைப்  பாருங்கள் !
————

“14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -
72  ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்
கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்
துறை, எழுத்துத்துறை என்று இந்தத்துறைகளை
மாத்திரம் ஒதுக்கிவிட்டு – அரசியல் துறையில்
மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என்
உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும்
என்று நான் எண்ணவில்லை “

———————-
ஒரு மணி நேரமாக முடியைப் பிய்த்துக்கொள்கிறேன்.
அர்த்தம் புரியவில்லை !
யாராவது  இதற்கான அர்த்தத்தை கொஞ்சம் விளக்கிச்
சொல்லி என்னைக் காப்பாற்ற  முடியுமா ?

  1. கமல்ஹாசன் என்கின்ற கலைத்துறையைச் சார்ந்த 5 வயதிலிருந்து 55 வயதுவரை கலைச்சேவை புரிகின்ற அல்லது புரிந்துகொண்டிருகின்ற ஒரு இளைஞனை அல்லது கலைஞனை இது விடயமாக அணுகினால் ஒரு வேளை உங்களுக்கு விடை என்கின்ற பதில் கிட்டலாம் அல்லது கிடைக்கலாம்…
    (அப்புறமா அங்கே போய்ட்டு காப்பாத்துங்கன்னு கத்தப்படாது…)

  2. யோசித்ததில் எனக்குக் கூட சில முடிகள் உதிர்ந்து விட்டன.

    என்னை ஓய்வெடு என்று சொல்கிறவன் கல் நெஞ்சக்காரன் என்பதுதான் பெறப்பட்ட பொருள். இதை யாராவது கண்டு பிடித்து விட்டால் அவனை சுத்தலில் விடத்தான் அதில் தன்னிலை, முன்னிலை, படர்கை எல்லாவற்றையும் கலந்து 412 நெகடிவ் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது.

    http://kgjawarlal.wordpress.com

    • “அரசியல் துறையில் மட்டும் ஓய்வு
      அளிக்க முடியாது என்று சொல்ல
      என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு
      கல்நெஞ்சம் இருக்கும் என்று நான்
      எண்ணவில்லை”

      - ஊஹூம் -பொருந்தவில்லையே !
      உங்களிடம் மிச்சமிருக்கும் அத்தனை
      முடிகளும் உதிர்ந்து விட்டாலும் சரியான
      பொருள் கிடைக்காது ஜவஹர் -

      அது தான் கலைஞர் !

  3. இதில் என்னங்க புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கு….கலைஞர் செய்து வரும் மட்டற்ற பணிகளான இலக்கியம் , கலை , எழுத்து இந்த துறைகளில் செய்வதை யாரும் நிறுத்த சொல்லி யாரும் சொல்லவில்லை..ஆனால் அரசியல் பணியில் ( நான் சொல்லல ) இருந்து மட்டும் ஓய்வு எடுகசொல்லி சொல்ல அவருடைய கல கண்மணிகளுக்கு கல் நெஞ்சம் இல்லை என்று சொல்கிறார் ..

    Madeswaran N

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s