ஒண்ணுக்குப் போக இடமில்லை -
நேப்பியர் பாலம் அலங்காரத்திற்கு
1.62 கோடியா ?
சென்னையில் நேப்பியர் பாலத்தை அலங்கரிக்கும்
விதத்தில் வண்ண விளக்குகளை அமைக்க
1.62 கோடி ரூபாய் செலவழிப்பதாக இன்று
செய்தி வந்திருக்கிறது -
சென்னையில் கடை கண்ணிகளுக்கோ, வேறு
அலுவலாகவோ வெளியில் செல்லும் பெண்களும்,
வயதானவர்களும் வெளியில் நேரமாகி விட்டால்,
ஒன்றுக்குப் போகக் தனியிடம் இல்லாமல்
தவியாய்த் தவிக்கிறார்கள்.
அவர்கள் தொல்லையைப் போக்க ஆங்காங்கே
பொது கழிப்பிடங்களைக் கட்டுங்கள் என்று
அனைவரும் வேண்டுகோள் விடுத்த வண்ணம்
இருக்கிறார்கள்.
நிர்வாகங்கள் இவை எவற்றையும் காதில்
போட்டுக்கொள்வதே இல்லை.இந்த லட்சணத்தில்
நேப்பியர் பாலத்தை வண்ண விளக்குகளால்
அலங்கரிக்க 1.62 கோடி செலவழிப்பதாக்
இன்று அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்த 162 லட்சத்தில் குறைந்த பட்சம்
162 பொது கழிப்பிடங்கள் கட்டலாம்.
இருக்கட்டும் -என்றாவது இவர்கள் இதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டிய காலம் வராமலா போகும் ?

It is a true one.They will give all facility except public .