சாரு நிவேதிதா என்னும் அறிவழகன் என்கிற ஒரு அசிங்கம் பிடித்த பச்சோந்தியாகிய ஆன்லைன் பிச்சைக்காரர் !

சாரு நிவேதிதா என்னும் அறிவழகன் என்கிற
ஒரு அசிங்கம் பிடித்த  பச்சோந்தியாகிய
ஆன்லைன் பிச்சைக்காரர் !

விகார எண்ணங்களும், வக்கிர புத்தியும் கொண்ட
இந்த ஆன்லைன் பிச்சைக்காரர்  தன்னைப் பற்றி
தானே வடித்துள்ள பிம்பம் இது -
—————————————————————————-
“ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை
இவருடைய எளிய உரைநடையில் என்னவாக
மாற்றமடைகின்றன !
மனித உடல் மற்றும் மனதின் மீது நமது கலாச்சார
வாழ்க்கை செலுத்தும் வன்முறைக்கு எதிராக
ஒரு மாற்று மொழியையும் புனைவு வெளியையும்
படைக்கிறது.
பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும்
சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார்.”
——————————————————————————-

சாரு என்கிற  ஆன்லைன் பிச்சைக்காரர்
கடந்த வாரம் வரை நித்யானந்தாவை கடவுளின்
அவதாரம் என்று கூறி எக்கச்சக்கமாக புகழ்ந்து
எழுதி நித்யானந்தா   ஆசிரமத்திலிருந்து
சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

இப்போது வீடியோ வெளி வந்துவிட்ட நிலையில்
தன் நிலையை நேரெதிராக மாற்றிக்கொண்டு அதே
நித்யானந்தாவை கேவலமாகத் தாக்கி  குமுதம்
ரிப்போர்ட்டரில் தொடர் எழுதிக்கொண்டு

இதையும்  நியாயப்படுத்தி -
இந்த வகையிலும் சம்பாதிக்க வழி செய்துக்
கொண்டிருக்கிறார்.

முன்னர் ஒரேயடியாகத் தூக்கி வைத்தும், இப்போது
கண்டபடித் தாக்கியும், இரண்டு நேரெதிரான
முறையில் பரபரப்பாக எழுதி – இதன் மூலம் -
சம்பாதிப்பது ஒன்றே தன் நோக்கம் என்பதைத் தானே
வெளிப்படுத்தி இருக்கும் இவர் -

இன்று வெளியாகியுள்ள ஜுனியர் விகடன் இதழுக்கு
அளித்துள்ள பேட்டியிலிருந்து  சில பகுதிகள் -

கேள்வி – நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக்கொண்டு
தான் புகழ் பாடியதாகவும், இப்போது அதை
மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப்
போவதாகவும்  சொல்லப்படுகிறதே ?

பதில் -சில மாம பயலுக கிளப்பி விடுற கதைக்கெல்லாம்
நான் கலங்க மாட்டேன்.  பணம் சம்பாரிக்கணும்னா
நான் எப்படி வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன்.எவ்வளவு
வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன்.

(இவர் எப்படி ஆன்லைனில் பிச்சை எடுத்து சம்பாதிக்கிறார்
என்றும்  ஒரு பாட்டில் விஸ்கிக்காக இவர் என்னவெல்லாம்
எழுதுகிறார் என்பதையும் தான் எல்லாரும் பார்க்கிறோமே -
இவரது சம்பாதிக்கும்  திறன் அனைவரும் அறிந்த ஒன்றே!)

இவர் எடுத்த வாந்தியிலிருந்து இன்னும் சில எச்சங்கள் -

நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டாக்ட் பண்ணி -
“சுவாமியை பாக்க வாங்களேன்னு கூப்டாங்க -
பொண்ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட
ஆரம்பிச்சுடும்ல “

“நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு
உஙகளுக்கு தெரியும். என்னோட மனைவிக்கு கடுமையான
கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட
கால் வலி தீரலை. ஆனா நித்யானந்தா அவளோட காலை
ஒரு தடவை தான் தொட்டார்.அந்த நிமிஷமே அவளோட
வலி சரியாகிடுச்சு. இதே மாதிரி எத்தனையோ பேரோட
வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணாலே
பார்த்திருக்கேன்.”

“இது மட்டுமில்லை.  ரெண்டாயிரம் பக்கம் கொண்ட
300 புத்தகங்களை நித்யானநதர் எழுதி இருக்கார்.
அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துக்கள்.
அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான
மகாபாரதத்தில் இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும்
அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர் ! பர்டிகுலரா எந்த
சுலோகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு
சொல்லுவார்.”

இதன் மூலம் இதுவரை தான் புகழ்ந்தது சரி தான் என்று
சாதிக்கிறார். இனி இப்போது இகழ்வதற்கு காரணம்
காட்டுகிறார் -

“அந்தக் காட்சிகளை பார்த்துப் பார்த்து நான் ரொம்ப
கடுப்புல இருக்கேன்.ஏன் நீ பெரிய யோக்கியனான்னு
நீங்க கேட்கலாம்.அவன் பண்ணக்கூடாத அந்த  தப்பை
நான் பண்ணலாம்.ஏன்னா “நானொரு உமனைசர்’ன்னு
பகிரங்கமாகவே சொல்லி இருக்கேன்.”

“உமனைசர்” என்பது ரொம்ப கௌரவமான  பண்பு என்று
இந்தக் குடிகாரர் சொல்ல வருகிறாரா ? வெளியே
சொல்லி விட்டு எந்தத் தப்பை வேண்டுமானாலும்
செய்யலாமா ? யார் வேண்டுமானாலும் யார் பின்னால்
வேண்டுமானாலும் நாயைப்போல (அல்லது சாருவைப்
போல )  அலையலாமா ?

அது சரி தான் என்று இவர் வாதிப்பாரேயானால்,
இவர் மனைவியின்  கதி என்ன ஆகும் ?

“நானும் அந்த போலிச் சாமியாரை சரியாக எடைபோடத்
தெரியாமல் ஏமாந்து விட்டேன் ” என்று  எல்லாரையும்
போல வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துப்பில்லாத
பிச்சைக்காரர் – இவருக்கெல்லாம்  ஒரு வலை வேறு -

இவருக்குப் பெரிய வாசகர் கூட்டம் இருப்பதாக வேறு
இவர் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்.
அவிழ்த்துப்போட்டுக்கொண்டு ஆடினால் பார்க்க ஆயிரம்
பேர் வரத்தான் செய்வார்கள். அவர்கள் எல்லாரும்
பாராட்ட வந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொள்வதா?

இவரெல்லாம் பெண் வயிற்றில் பிறக்கவில்லையா ?
இவருக்கு சகோதரிகளே இல்லையா ?
அவர்களை எல்லாம் இவர் எந்தக் கண்ணோட்டத்தில்
பார்ப்பார் ? உமனைசர் கண்ணோட்டத்திலா ?

சீ – காரித்துப்ப வேண்டும் போல் இருக்கிறது !

  1. Pingback: 2010 in review « யாத்ரிகன் பயணம்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s