சிங்கப்பூர் தமிழர்கள்

சிங்கப்பூர்   தமிழர்கள்

11வது நூற்றாண்டிலிருந்து நமக்கு சிங்கப்பூரின்  சரித்திரம்
தெரிய வருகிறது. தமிழகத்திலிருந்து சென்று வெற்றிகொடி
நாட்டிய சோழ தளபதி ஸ்ரீவிஜயன் தலைமுறை துவங்கியது
11ஆம்  நூற்றாண்டில். (இதனைக்குறித்து  பின்னர்
தனியாக கதைக்கலாம் ) அவனது வம்சத்தில் வந்த
பரமேஸ்வரன் ஆண்ட 16ஆம் நூற்றாண்டில் சிஙகப்பூர்
துறைமுகத்தைத் தாக்கி அழித்தனர்
போர்ச்சுக்கீசியர்.ஆனால்  கைப்பற்றவில்லை !

இன்றைய சிங்கப்பூரின் சரித்திரம் 1819 ல்  பிரிட்டிஷ்
காலனி ஆட்சியுடன் துவங்குகிறது. ஆங்கிலேயரின் காலத்தில்,
இந்தியாவுக்கும் சீனாவிற்கும்  இடையே வெகு முக்கியமான ஒரு
துறைமுகமாக சிஙகப்பூர்  அமைந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது குறுகிய காலத்திற்கு
ஜப்பானின்  ஆதிக்கத்துக்குள்ளும்  வந்தது சிங்கப்பூர்.
மலேசியாவுடன்  இணைந்ததும்,  பின்னர் 1965ல்
பிரிந்து  தனி நாடு ஆனதும்  சரித்திரம்.

தன்னிகரில்லாத நிர்வாகி  லீ குவான் யூ- வின் தலைமையில்
மிகச்சிறப்பான  முன்னேற்றத்தைக் கண்டது சிஙப்பூர்.
பின்னர் அவரது  புதல்வர் கோ சோக் டோங் நாட்டை மேலும்
முன்னேற்றிச் சென்றார்.

கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் அல்லது முறைப்படுத்தப்பட்ட
ஜனநாயகம் என்று அரசியல் வாழ்வில் கட்டுப்பாடுகள்
ஏற்படுத்தப்பட்டாலும்,
பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கைத்தரத்திலும்
மிக உன்னத ஒரு நிலைக்கு சிங்கப்பூர் கொண்டு
செல்லப்பட்டது இவர்களது ஆட்சியில்.

உலக மக்கள் அனைவரும் வாழ்வில்  ஒரு தடவையாவது
சிங்கப்பூர் சென்று வர வேண்டும் என்று ஆசைப்படும்
அளவிற்கு சிங்கப்பூர்  சகல விதத்திலும் முன்னேறி உள்ளது.

சீனர்கள்,மலாய், தமிழர்கள் என்று பல இனத்தவரைக்
கொண்டிருந்தாலும், இந்நாட்டில் சட்டத்தின் முன்
அனைவரும் சமமாகவே கருதப்படுகின்றார்கள்.

இரண்டு லட்சத்திற்கும்  அதிகமான தமிழர்கள் -
மக்கள்  தொகையில் சுமார் 7% க்கும்  அதிகமான
தமிழ் மக்கள் சம உரிமையுடன்  வாழும் நாடு இது.

தமிழ் மொழியில் ஏடுகள் வருகின்றன. அழகு தமிழ்
பேசும்  வானொலி நிலையம் உள்ளது.
தமிழ்த் தொலைக்காட்சி இருக்கிறது.
ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.தமிழர் கலை,
இலக்கியம்,  இசை,நடனம், மொழி, பண்பாடு
அனைத்தையும் விரும்பி வளர்த்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி ஒரு முறை கூறினார். என்றொரு நாள்
இரவு 12 மணிக்கு  நகைகள் அணிந்த இளம்பெண்  ஒருத்தி
தன்னந்தனியே தெருவில்  பத்திரமாகச்சென்று வரும் நிலை
நம் நாட்டில் வருகிறதோ அன்று  தான் உண்மையில்
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக நான் கருதுவேன் என்று.

அந்த நிலை, அத்தகைய பாதுகாப்பான சூழ்நிலை சிங்கப்பூரில்
உறுதி செய்யப்பட்டுள்ளது.மிகச்சிறப்பான,  பாதுகாப்பான
சூழ்நிலையில்  சிங்கப்பூர்  குடிமக்கள்  வாழ்கிறார்கள்.
வாழ்க  சிங்கப்பூர்  – வளம் பெருக சிங்கப்பூர்  தமிழ் மக்கள !

சிங்கப்பூர்  நாட்டின்   கண்கொள்ளாக் காட்சிகள்   சில -


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s