மலேசியத் தமிழர்கள்


மலேசியத்  தமிழர்கள்

6ம்  நூற்றாண்டில்  துவங்கியது தமிழ் நாட்டிற்கும்
மலேசியாவிற்குமான  உறவு.
தொடர்ந்து சுமார்  500 ஆண்டுகளுக்கு  தமிழ்ப்
பரம்பரையினரான  மன்னன் விஜயன் சந்ததியினர்
மலேசியாவை  ஆண்டனர்.

10 மற்றும் 11ம்  நூற்றாண்டுகளில் சோழ மன்னன்
ராஜராஜனும்  பின்னர்  அவர் மகன் ராஜேந்திர சோழனும்
மலேசிய  மண்ணை  தங்கள்  கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தனர். இந்து மதமும் பௌத்த மதமும் செழித்திருந்தன.

15ம் நூற்றாண்டிற்குப் பிறகு  சுல்தான்களில்  இஸ்லாமிய
ஆட்சி ஏற்பட்டதைத்தொடர்ந்து பெரும்பாலான  மக்கள்
இஸ்லாம் மதத்தைப் பின்பற்றலாயினர்.

பின்னர் ஐரோப்பியரின் ஆதிக்கம். முதலில் டச்சுக்காரர்கள்.
பின்னர்  பிரிட்டிஷார்.2ம் உலகப்போரின்போது 4வருடங்கள்
ஜப்பானியர். மீண்டும் பிரிட்டிஷார்.

1957ல்  சுதந்திரம். 1963 முதல் தற்போதைய நிலை.

6ம்  நூற்றாண்டிலேயிருந்தே மலேசியாவில்  தமிழர்
வசித்து வந்தாலும் அதிக எண்ணிக்கையில்
தமிழ் நாட்டிலிருந்து தமிழர் குடிபெயர்ந்தது 19ம் நூற்றாண்டில்
பிரிட்டிஷ் ஆட்சியின் போதுதான்.

தற்போது மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை
ஏறக்குறைய  18 லட்சம்.  இது மலேசியாவின் மொத்த
மக்கள் தொகையில் 7.2 சதவீதம். டாக்டர்கள், வக்கீல்கள்,
ஆசிரியர்கள், ஆடிட்டர்கள், தொழில் முனைவோர், உழைக்கும்
தொழிலாளிகள்  என்று சமுதாயத்தின் பல மட்டங்களிலும்
தமிழர்கள்  நிரவி இருக்கின்றனர். தமிழ் மொழி,பண்பாடு,
பழக்க வழக்கங்களைப் பேணிக்காப்பதில் பெரும் ஆர்வம்
கொண்டு வாழ்கின்றனர்.

மலேசியாவின் விசித்திரமான  அரசியல்  சட்டம்  காரணமாக
மலேசியத் தமிழர்கள் இன்று  மகிழ்ச்சியாக  இல்லை.
கட்டுப்படுத்தப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட மொழி, இன மற்றும்
மத  கலாச்சாரங்கள் அவர்களின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டு
போய் விட்டது.

தங்கள்  உரிமைக்காகப் போராடும் மலேசியத்தமிழர்கள்
தங்கள்  போராட்டத்தில் வெற்றியும் அதன் மூலம் வாழ்வில்
மகிழ்ச்சியும் பெறும் நாள்  விரைவில்  வர  வேண்டுவோம்.


மலேசியாவின்  சில  அழகான    தோற்றங்கள்  -


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s