ஸ்விஸ் தமிழர்கள்
ஏறத்தாழ 40,000 ஈழத் தமிழர்கள் ஸ்விட்சர்லாந்து
நாட்டில் குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் 1980 க்குப் பிறகு
குடியேறியவர்கள்.
இந்நாட்டின் மக்கள்தொகையில் 0.5 % அங்கம்
வகிக்கும் இவர்களை அகதிகளாக உள்ளே வந்த
புதிதில் உள்ளூர் மக்கள் வரவேற்கவில்லை.
தங்கள் வரிப்பணத்தில் வாழ வந்தவர்களோ
என்ற அச்சம் !
ஆனால், நாளடைவில், தமிழர்கள், அரசாங்க உதவியை
எதிர்பார்க்காமல், உழைத்துப் பிழைப்பவர்கள் என்பது
தெரிந்ததும், அவர்கள் எல்லா ஒத்துழைப்பையும் அளிக்க
ஆரம்பித்தார்கள். இன்று பெரும்பாலான தமிழர்கள் தங்கள்
சொந்த இருப்பிடங்களில் வசிக்கிறார்கள். அதிக பட்சமாக
இன்னும் 1500 பேர்கள் மட்டும் அகதிகள் என்கிற
நிலையிலேயே இருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒட்டல், கடைகளில் பணி
புரிகிறார்கள்.சொந்தமாகவும் சிறு தொழில்களில்
ஈடுபட்டு இருக்கிறார்கள்.தமிழ்ப் படங்கள்
திரையிடப்படுகின்றன.கோயில்கள் உள்ளன. தமிழர்
பள்ளிகளும் உள்ளன. ஓரளவு
வசதியாகவே வாழ்கிறார்கள்.
இருந்தாலும் -தமிழ் ஈழம் மலரும் நாளை ஏக்கத்துடன்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் !
ஸ்விட்சர்லாந்து நாட்டின் சில எழில் கொஞ்சும் காட்சிகள் -






