கமலஹாசன் – ஸ்ருதி நிகழ்த்தும்
பண்பாட்டுப் புரட்சி !
“திருமணம் என்கிற உறவே
தேவையில்லாதது, பைத்தியக்காரத்தனம் !
அவர்கள் எனக்குத் தேவை என்பதால், வேறு வழியின்றி
2 முறை அந்த தவறைச் செய்து விட்டேன்” என்று முன்பு
கூறிய கமலஹாசன் இப்போது இன்னொரு புரட்சியிலும்
ஈடுபட்டிருக்கிறார்.
ஏற்கெனவே ஆடைகள் எல்லாம் அனாவசியம் என்று
பாதி நேரங்களில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும்
மகள் ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு
‘போஸ்’ கொடுத்து மீண்டும் ஒரு பரபரப்பை உண்டு
பண்ணி இருக்கிறார்.
வளர்ந்து விட்ட பெண்களை பாராட்டும் வேளைகளில்,
பெற்ற தந்தை என்றாலும் கூட, தலையில் அல்லது
மேல் நெற்றியில் உச்சி முகர்வது பைத்தியக்கார,
பத்தாம்பசலி தமிழர்களின் பழைய பழக்கம் -பண்பாடு.
உலக நாயகனும் அதையே செய்யலாமா?
எனவே தான் இந்தப் பண்பாட்டுப் புரட்சி !

